fbpx

அரவிந்த் சாமியின் உண்மையான அப்பா இந்த நடிகரா..? குழந்தையிலேயே தத்துக் கொடுத்தது அம்பலம்..!!

நடிகர் அரவிந்த் சாமியை பிறந்தவுடன் தத்துக்கொடுத்து விட்டதாக நடிகர் டெல்லி குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் அரவிந்த் சாமி. ரோஜா, பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார். சில ஆண்டுகளாக திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த நிலையில், தனி ஒருவன் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார். அதுவரை ரொமான்டிக் ஹீரோவாக நடித்து வந்த அவர், இந்த திரைப்படம் மூலம் வில்லனாக களம் இறங்கினார். தனி ஒருவன் திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமி பிறந்தவுடனே தத்துக்கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சித்தி, மெட்டி ஒலி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் அப்பா. இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், பிறந்த உடனேயே அரவிந்த் சாமியை, டெல்லி குமார் தனது அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டார். பிறந்தது முதலே அந்த குடும்பத்திலே வளர்ந்ததால் அரவிந்த் சாமிக்கு, டெல்லி குமாரின் குடும்பத்துடன் டச் இல்லாமல் இருந்துள்ளது. எப்போதாவது வீட்டில் விசேஷம் என்றால் மட்டும் அரவிந்த்சாமி வந்துவிட்டு போவார் என்று அவரது தந்தை டெல்லி குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”உங்கள் உழைப்பு உங்களுக்கு”..!! காக்கா முட்டை பட இயக்குனர் வீட்டில் கொள்ளை..!! திருடர்கள் எழுதி வைத்த கடிதம்..!!

Tue Feb 13 , 2024
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன், தற்போது பட வேலை சம்பந்தமாக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில், பூட்டி இருந்த அவரது வீட்டில் கடந்த 8ஆம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட […]

You May Like