fbpx

2023-க்கான தமிழக அரசின் காலண்டரில் இப்படி ஒரு பிழையா..? இதை கவனிச்சீங்களா..?

தமிழக அரசால் அச்சிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான காலண்டரில் தை மாதத்தில் இரண்டு நாட்கள் அதிகரித்தும் மாசி மாதத்தில் இரண்டு நாட்கள் குறைத்தும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் சென்னையில் உள்ள மைய அச்சகத்தில் பல்லாயிரக்கணக்கான காலண்டர் அச்சிடப்படும். அவை அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உட்பட அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும். நடப்பாண்டிற்கான காலண்டர் வழக்கம் போல் அச்சிடப்பட்டு அவை பாதியளவு விநியோகமும் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த காலண்டரில் தை மாதம் 29ஆம் தேதியோடு முடியும் நிலையில், தவறாக 30, 31ஆம் தேதி அடுத்தடுத்து அச்சிடப்பட்டுள்ளது.

2023-க்கான தமிழக அரசின் காலண்டரில் இப்படி ஒரு பிழையா..? இதை கவனிச்சீங்களா..?

அதேபோல் மாசி மாதத்தில் 30 நாட்கள் வருவதற்கு பதிலாக 28 நாட்கள் மட்டுமே உள்ளது. மற்ற காலண்டர்களோடு ஒப்பிட்டு இந்த தவறை காலதாமதமாக தெரிந்து கொண்ட எழுது பொருள் அச்சுத்துறை அதிகாரிகள் விநியோகம் செய்யப்பட்ட அரசு காலண்டர்களை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் அச்சிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான காலண்டர்களில் பிழை ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

முடிவுக்கு வந்தது பாரதி கண்ணம்மா சீரியல்….! கண்ணம்மாவுடன் இணைந்தாரா பாரதி….?

Mon Jan 23 , 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொலைக்காட்சியில் பல நெடுந்தொடர்கள் ஓடினாலும் தாய்மார்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்கும் ஒரு நெடும் தொடராக பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் உள்ளது. 3 வருடங்களுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மிக விரைவில் முடிவுக்கு வருகிறது என சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை இதோ […]

You May Like