fbpx

ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்த நோயா..? மார்ச் மாதம் முதல் சிகிச்சை.. வெளியான புதிய தகவல்..

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.. அந்த வகையில் தற்போது புடினின் உடல்நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புடினை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது புடின் தொடர்ந்து தனது கால்களையும் பாதங்களை நகர்த்தியதாக கூறப்படுகிறது.. இதனால். புடின், பார்கின்சன் நோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.

எனவே மார்ச் மாத தொடக்கத்தில் புடின் புதிய சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது, புடின் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான மருத்துவ பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.. அதில் “கடந்த இறுதியில், புடின் மற்றொரு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சமீபத்திய சிகிச்சையானது எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை.. எனவே பரி சோதனை முடிவுகளின் அடிப்படையில், மார்ச் 5 ஆம் தேதி முதல் புடினுக்கு புதிய சிகிச்சைகள் தொடங்கும். வரவிருக்கும் நாட்களில் ஜனாதிபதியின் திட்டங்கள் மற்றும் முடிவுகளை தீவிரமாக பாதிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்ய அதிபர் மாளிகையான, கிரெம்ளின் புடினின் உடல்நிலை குறித்த வெளியான தகவல்களை மறுத்துள்ளது.. மேலும் அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ், புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து..

Maha

Next Post

தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

Tue Feb 21 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
gold

You May Like