நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் நடிகர், நடிகைகளுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரங்களை இங்கு பார்ப்போம்.
அதாவது, இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ள சரத்குமாருக்கு ரூ. 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதைத்தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபுவுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் 1.5 கோடி சம்பளமும், விஜய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் நடிகர் ஷாம்-க்கு ஒரு கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு ரூ.60 லட்சமும், முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை குஷ்பு-க்கு ரூ.40 லட்சமும், விஜய்க்கு அம்மாவாக நடித்திருக்கும் ஜெயசுதாவுக்கு ரூ.30 லட்சமும், நண்பராக வரும் யோகி பாபு ரூ.35 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா இதுவரை வாங்காத அளவுக்கு சம்பளத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ரூ.110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர இயக்குனர், இசையமைப்பாளர் உட்பட மற்ற அனைவருக்கும் மிகப்பெரிய தொகை தான் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்படி பார்த்தால் வாரிசு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் இந்த சம்பளத்திலேயே அடங்கி இருக்கும் என்று தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள இந்த திரைப்படம் நல்ல கலெக்ஷனை பெற்றால் மட்டுமே தயாரிப்பாளர் இந்த செலவு அனைத்தையும் ஈடுகட்ட முடியும். இருப்பினும் தில் ராஜு வாரிசு படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் கணக்கு பார்க்காமல் நடிகர்களுக்கு சம்பளத்தை வாரி இறைத்திருக்கிறார். அவருடைய இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆனதா என்பது விரைவில் தெரிந்து விடும்.