fbpx

அவ்வை சண்முகி படத்தில் கமலின் மகளாக நடித்த குழந்தையா இது? இப்ப என்ன பண்றாங்க தெரியுமா?

கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் குழந்தை வேடத்தில் நடித்து பிரபலமானவர் அன் அல்க்ஸியா அனன்ரா. குழந்தை நடிகையான அவர் இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? 

1996 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் அவ்வை சண்முகி. நகைச்சுவை படமாக உருவான இந்த படத்தில் கமல்ஹாசன், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜெமினி கணேசன், நாகேஷ், ஹீரா, மணிவண்ணன், நாசர் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கமல்ஹாசன் – மீனாவின் ரீல் மகளாக நடித்தவர் அன் அல்க்ஸியா அனன்ரா. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிறந்த குழந்தை நட்சத்திற்கான தமிழ்நாடு அரசின் விருதையும் அண்ட்ரா பெற்றார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹேரா பெரி என்ற பாலிவுட் படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு அன் அலெக்ஸியா அனன்ரா பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அனன்ரா படங்களில் நடிப்பதை அவரது பெற்றோர் விரும்பவில்லை என்பதால் அவர் அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் விளம்பரங்களில் நடிக்க பெற்றோர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் விளம்பரங்களில் நடித்தார்.  ஆனால் படங்கள் அதிக நேரம் எடுக்கும் என்பதால், அவர்களின் பெற்றோர் சற்று தயங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

ஹீரா பெரி படம் கோடை விடுமுறையில் எடுக்கப்பட்டதால் அப்படத்தில் அனன்ராவை நடிக்க அவரின் பெற்ரோர் அனுமதி வழங்கினர். ஹீரா பேரி மற்றும் அவ்வை சண்முகி படங்களை தவிர, தபுவுடன் தாயின் மணிக்கொடி (தமிழ்) மற்றும் மிதுன் சக்ரவர்த்தியின் ஹத்யரா (இந்தி) ஆகிய படங்களில் அனன்ரா நடித்திருந்தார். எனினும் இந்த படங்களுக்கு பிறகு அவரது பெற்றோர் வேறு எந்த படத்திலும் நடிக்க அனன்ராவுக்கு அனுமதி வழங்கவில்லை.

சென்னையில் பிறந்து வளர்ந்த அன் அல்கெஸியா அனன்ரா தற்போது பிராஜக்ட் ஆலோசகராக பணிபுரிகிறார். டேக் மீ பேக் சென்னை மற்றும் வேஸ்ட் 360 தீர்வுகள் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்த சூழலில் மீண்டும் நடிக்கும் திட்டம் இல்லை என்று அனன்ரா கூறியுள்ளார். சில சமயங்களில் தனக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் அவர், தான் சிறுவயதில் ஒரு நடிகையாக சிறப்பாக இருந்ததாகவும், மீண்டும் வருவதற்கான முயற்சியில் ஈடுபட விரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Read More: பிக்பாஸ் ரஞ்சித் எத்தனை பெண்களை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா..? இப்போது யாருடன் வாழ்கிறார்..?

English Summary

Is this the child who played Kamal’s daughter in Avvai Shanmukhi? Do you know what they are doing now?

Kathir

Next Post

தீபாவளி பரிசாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கார்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை நிறுவனம்..!!

Sun Oct 13 , 2024
Hyundai to Mercedes Benz! 28 cars, 29 bikes gifted to employees! Early Diwali at THIS Chennai-based firm

You May Like