ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜாவை தடுத்து நிறுத்தி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. இம்மாதத்தில் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களைப் பாடி துதிப்பர். இந்த வழிபாடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, மார்கழி முதல் தேதியில் ஆண்டாளை தரிசிக்க, இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அதிகாலையிலேயே சென்றார். ஆனால், அங்கு சுவாமி தரிசனம் செய்ய ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இளையராஜா நுழைய முயன்றபோது, அங்கு இருக்கும் அந்தணர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் அங்கிருந்தபடியே கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறைவனை பல பாடல்களில் பாடிய இசைஞானிக்கே இந்த நிலைமையா..? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read More : பிறந்தது மார்கழி..!! இப்படி வழிபட்டால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக அமையும்..!!