விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. விசித்திராவுக்கும் ஜோவிதாவுக்கும் இடையில் படிப்பு பற்றிய பிரச்சனை போய்க் கொண்டிருந்தது. அதனை தீர்த்து வைக்கும் விதமாக நேற்றைய தினம் கமல்ஹாசன் எபிசோட் ஒளிபரப்பாகியது. இதனை அடுத்து முதல் ஆளாக அனன்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, முதல் வாரத்தின் தலைவராக விஜய் இருந்தார். இதையடுத்து, இந்த வாரத் தலைவராக சரவண விக்ரம் தேர்வாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.