fbpx

இதுதான் 3ஆம் உலகப் போரா..? துல்லியமாக கணித்த பாபா வாங்கா..!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது.

இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அப்படி எதிர்காலம் குறித்து துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் தான் பாபா வாங்கா. இதுபோன்ற பல கணிப்புகள் இருந்தாலும் கூட, இவரைப் போல யாரும் இந்தளவுக்குத் துல்லியமாகப் பெரிய நிகழ்வுகளைக் கணித்ததே இல்லை.

இந்த பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. ஒட்டமான் பேரசசில் 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் கூறுகின்றனர்.

இதுபோல கடந்த காலங்களில் பலர் கணித்திருந்தாலும் இவர் தனித்தே தெரிகிறார். அதற்கு முக்கிய காரணம் இவர் துல்லியமாகக் கணித்தவை எல்லாம் ஏதோ சின்ன சின்ன விஷயங்கள் இல்லை. இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு என இவர் கணித்த மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகள். அவ்வளவு ஏன் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களைக் கூட கணித்திருந்தார். இவரது கணிப்புகள் 80-85% வரை துல்லியமாக நடந்துள்ளது.

இதற்கிடையே இந்த 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு இப்போது முக்கியமானதாக இருக்கிறது. முதலில் அவர் இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார். அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார். இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால், இப்போது இஸ்ரேல் – ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ளது.

இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்புள்ளது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், இஸ்ரேல் போரில் அப்படி இல்லை.

மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போர் தொடரும்பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம். குறிப்பாக, இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே நுழையும். ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கிய நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்கள் கருத்து. அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

Chella

Next Post

’தண்ணீரை தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்’..!! செல்லூர் ராஜூவை கிண்டலடித்த துரைமுருகன்..!!

Mon Oct 9 , 2023
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். […]

You May Like