fbpx

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..? பள்ளிக்கல்வித்துறை எடுக்கப் போகும் முக்கிய முடிவு..!! மாலை அறிவிப்பு..?

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில், தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த 19ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போது மேலும் வரும் விடுமுறைகளை கணக்கில் வைத்து கூடுதலாக மேலும் சில சனிக்கிழமைகள் விடுமுறையை ரத்து செய்வோம். எவ்வளவு மணி நேரம் இழக்கப்பட்டு உள்ளதோ அதை வைத்து கூடுதல் சனிக்கிழமையை பணி நாட்களாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முக்கிய புள்ளி..!

Fri Jun 23 , 2023
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சு வலி […]

You May Like