fbpx

டிடிவி தினகரன் திவாலானவரா..? அவமானப்படுத்திய அமலாக்கத்துறை..!! அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டிடிவி தினகரன், கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து ரூ.62.61 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலம் பெற்றதாகவும், அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 1998இல் டிடிவி தினகரனுக்கு ரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அபராதம் ரூ.28 கோடியாக குறைக்கப்பட்டது. கடந்த 2001இல் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதத்தை செலுத்தாததால் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்தது.

அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையில், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003இல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005இல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஐகோர்ட்டில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Chella

Next Post

ஷாஜகான் தனது மனைவியுடன் அடக்கம் செய்வதை விரும்பவில்லையாம்!… தனி கல்லறை கட்டப்பட்டதாம்!... உண்மை என்ன?

Sat Oct 21 , 2023
பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. 32 மில்லியன் ரூபாய் செலவில், 1632-1653 ஆண்டு கால கட்டத்தில், நுட்பமான வேலைகளை கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பல சிறப்புகள் அடங்கிய […]

You May Like