நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”விஜய் என்ன பெரிய தலைவரா..? ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சியை தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியைவிட விஜய் பெரிய தலைவரா..? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். விஜய்யால் எனக்கு வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். ஒரே தொகுதியில் நாங்கள் விஜய்யும், நானும் போட்டியிடுகிறோம். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்கக் கூடாது. நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். 2026 தேர்தல் முடிவில் நான் யார் என்பது தெரியும்.
எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என கூறுவோர், அவர்களிடம் இருக்கும் நாதக கட்சி உறுப்பினர் அட்டையை காட்டச் சொல்லுங்கள். மொழி, இனம் என அடையாளப்படுத்துவது பிரிவினைவாதம் எனக் கூறுகிறார். உலகம் முழுவதும் மொழியின் அடிப்படையில்தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், உங்கள் கட்சியை உலக வெற்றிக் கழகம் என்று தொடங்கியிருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தது ஏன்..?
உங்களுக்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்கள் முழுவதும் ரசிகர்கள் அதிகம். கேரளாவில் கட்சி தொடங்காமல் இங்கே வந்தது ஏன்..? இதே கேள்விதான் அண்ணாமலையிடமும் கேட்டேன். கர்நாடகத்தில் பாஜக தலைவர் ஆகியிருக்கலாமே..? நான் பேசினால் பாசிசம், நீங்கள் பேசினால் தேசியவாதமா? என்று பேசினார்.
Read More : பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை..!! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!