கேப்டன் விஜயகாந்த், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததும் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தார். அப்போதைய அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தொண்டர்களால் கருதப்பட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக் கண்டவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சிக் கண்டார். ஆனால், அவரது உடல்நிலை கட்சிக்கும் அவருக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இவரது மறைவை ஒட்டி நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொண்டர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.