fbpx

உங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..? உடனே சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்..!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசின் எந்தவொரு திட்டத்திற்கும் தற்போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து பணிகளுக்கும் ஆதார் அவசியம். ஆனால், உங்களது ஆதார் கார்டு, தவறான நபரிடம் சென்றுவிட்டால், அது தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், வீட்டிலிருந்தே அதை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிப்பது எப்படி..?

* முதலில் uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டும்.

* இங்கு Aadhaar Services என்பதன் கீழே Aadhaar Authentication History என்ற விருப்பம் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

* பின்னர், ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை பார்த்தவாறு உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* இதையடுத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை கொடுக்க வேண்டும்.

* அதன் பிறகு அங்கீகார வகை, தேதி வரம்பு மற்றும் OTP உட்பட அங்கு கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

* பின்னர், Verify OTP என்பதைக் கிளிக் செய்தால், ஒரு பட்டியல் தோன்றும், அதில் கடந்த 6 மாதங்களில் ஆதார் எப்போது, ​​எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

* அந்த பட்டியலில் உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிந்தால், உடனே 1947 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து புகாரளிக்கலாம். அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அப்படியும் இல்லையென்றால், https://resident.uidai.gov.in/file-complaint இணைப்பில் ஆன்லைனில் புகார் செய்யலாம்.

Read More : BREAKING | தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு..!! மே 13ஆம் தேதி தீர்ப்பு..!! கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு..!!

English Summary

If you suspect that your Aadhaar number is being misused, you can check it online from home.

Chella

Next Post

கப்பிங் தெரபி பற்றி தெரியுமா..? பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!!

Tue Apr 29 , 2025
Cupping therapy involves placing special cups on the surface of the skin, creating a vacuum that lifts and separates the muscle and fascia.

You May Like