நாட்டில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. அத்துடன் அரசின் பலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். மேலும், ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்த ஆதாரை தவறாகப் பயன்படுத்தினால், சிறை தண்டனைக்கும் வழிவகுக்கும்.
ஆதார் என்பது ஒருவரின் கருவிழி, கைரேகை ஆகியவற்றின் தரவுகள் பயோமெட்ரிக் சாதனங்களால் சேகரிக்கப்படுகிறது. இது மிக மிக முக்கியமானவை. ஆனால், இதை யாராவது மோசடி செய்ய முயன்று கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
uidai.gov.in என்ற வலைத்தளத்தின்படி, ஆதார் எண் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுதல், அவரது அடையாளத்தை ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்துவது போன்றவை சட்டப்படி மிகப்பெரிய குற்றம் ஆகும். இவ்வாறு செய்தால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
கண்டுபிடிப்பது எப்படி..?
* முதலில், MyAadhaar என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
* அதில், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். பின்னர், “OTP மூலம் Enter” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
* இதையடுத்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு உள்நுழையவும்.
* இப்போது “Authentication History” பகுதிக்குச் சென்று பார்த்தால், உங்கள் ஆதார் அட்டை எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* உங்கள் ஆதார் அட்டையை யாராவது தவறாகப் பயன்படுத்தியதாக நீங்கள் கருதினால், உடனே UIDAI-க்கு புகாரளிக்கலாம்.