fbpx

உங்கள் லேப்டாப்பில் அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறதா?… சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்கள் இதோ!…

நீங்கள் பயன்படுத்தும் மடிக்கணினி சரியாக சார்ஜ் ஆகாமல் இருந்தால், நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மடிக்கணினி என்ற லேப்டாப் சில சமயங்களில் பிரச்சனைக்கு உள்ளாவது உண்டு. சில சமயங்களில் சார்ஜ் ஆகாமல் இருக்கும். ​​இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். அதைச் சரிசெய்ய உங்கள் மடிக்கணினியை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம். பவர் அடாப்டரைச் சொருகி, சுவிட்சை சரியாக போட்டுள்ளோமோ என்று முதலில் சரி பாருங்கள். இரண்டாவதாக, லேப்டாப்பின் சார்ஜிங் போர்ட்டில் சார்ஜிங் பின்னை சொருகி இருக்கிறோமா ? என்று சரி பாருங்கள்.

இந்த பிரச்சனைக்கு முதல் காரணமாக சார்ஜர் இருக்கலாம். லேப்டாப் மற்றும் பவர் அவுட்லெட்டில் சார்ஜர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். கேபிள் சேதமடைந்தால், அதை மாற்றவும்.மடிக்கணினி முழுமையாக அல்லது சரியாக சார்ஜ் செய்யாததற்கு சார்ஜிங் போர்ட் காரணமாக இருக்கலாம். போர்ட்டில் அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கவும்.

காலப்போக்கில் பேட்டரி சிதைவடைய வாய்ப்பு உண்டு. உங்கள் மடிக்கணினி ஓரிரு வருடங்கள் பழையதாக இருந்தால், பேட்டரி சார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம். சிறந்த கம்பெனி பேட்டரியாக மாற்றவும்.சில மால்வேர்கள் பேட்டரியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். தீங்கிழைக்கும் இதுபோன்ற மால்வேர்கள் கோப்புகளை அகற்றவும். வைரஸ் ஸ்கேன் செய்யவும்.

Kokila

Next Post

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா?!... வருடாந்திர ஊதிய ஒப்பந்தம் வெளியீடு!

Fri Apr 28 , 2023
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், 2022-2023ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த […]

You May Like