fbpx

உங்கள் நாக்கு மஞ்சள் நிறமாக மாறுகிறதா?… ஆபத்து!… 30 வினாடிகள் இதை மட்டும் செய்யுங்கள்!… எந்த நோயும் வராது!

நாக்கு முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து. இதனை தடுக்க பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளித்தால் பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும்.

எல்லோரும் முத்துப் போல வெண்மையான பற்களை விரும்புகிறார்கள். ஆனால் நாக்கை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள். ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். மேற்பரப்பில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் போதும். ஆனால் முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து.வாய் சுகாதாரத்தை பேணாமல் விடுவது, புகைபிடித்தல், மரபியல் காரணம், கோப்பி, ரீ ஆகிய பானங்களை அருந்துவது போன்ற காரணங்களால் நாக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். நாவில் வெள்ளை பூச்சு உணவு துகள்கள், கிருமிகள், இறந்த செல்கள் காரணமாகவும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன.

அழுக்குபடிந்த நாக்கை சுத்தம் செய்ய நாக்கு வளிப்பானை (tongue cleaner) பயன்படுத்துவதாகும். இவை மருந்தகங்களில், சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். இவை உங்கள் நாக்கில் உள்ள பக்டீரியா மற்றும் கழிவுகளை நீக்கும். தயிர் மாதிரியான புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்பதும் வாயில் இருக்கும் பக்டீரியாக்களை நீக்கும். புரோபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் வல்லமை கொண்டவை. இது நாக்கில் வெள்ளை பூச்சு உருவாவதைத் தடுக்கும்.பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கலாம். நாவில் உள்ள பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும்.

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரை சுமார் 30 வினாடிகள் முன்னும் பின்னுமாக வாய்க்குள் கொண்டு சென்று கொப்பளிக்கவும். உப்பு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. வாயில் உள்ள பக்டீரியாக்களை அழிப்பதோடு, உங்கள் நாக்கில் வெள்ளை நிறத்தை மாற்றவும் உதவுகிறது.ஓயில் புல்லிங் என்பது பழங்கால ஆயுர்வேத முறை. ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு அதனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் வைத்திருங்கள். அதை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். இதனால் வாயிலிருந்து பக்டீரியா, கழிவுகள் நீங்கும்.

Kokila

Next Post

எப்போதும் ஸ்லிம்மாகவே இருக்க ஆசையா?... அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!... சில அடிப்படை டிப்ஸ் உங்களுக்காக!

Fri May 12 , 2023
எடைகுறைப்பது மட்டுமன்றி (ஸ்லிம்) ஒல்லியான மற்றும் ஃபிட்டான தேகத்தை வாழ்நாள் முழுதும் பராமரிக்க சில அடிப்படை டிப்ஸ்களை பின்பற்றினால் போதும். எடை குறைப்பு என்பது ஒரே ஒரு செயலால் மட்டும் நிகழ்வது அல்ல; இதில் பல்வேறு செயல்கள் அடங்கியிருக்கிறது. அதாவது உணவு பழக்கம், டயட் முறை, உடற்பயிற்சி, போதை மற்றும் புகைப்பழக்கம் போன்ற பலவும் அடங்கியிருக்கிறது. இங்கு நம்மில் பலருக்கும் ஸ்லிம்மாகவே இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உடல் எடையில் […]

You May Like