வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம்.

படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், நடிகர்களுக்கு பரிசுகளை அளித்தார். இதனிடையே இன்று கூல் சுரேஷுக்கு அதிக விலை கொண்ட ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி மதிப்பிலான கார் , கவுதம் மேனனுக்கு 2 லட்சம் மதிப்புடைய ராயல் என்பீல்டு பைக் பரிசாக வழங்கினார்.
இதனிடையே ரசிகர்கள் கூல் சுரேஷுக்கும் ஒரு பரிசை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனால் கூல் சுரேஷை பாராட்டி ஐசரி கணேஷ் அவருக்கு ஐபோன் பரிசு வழங்கினார். பதிலுக்கு கூல் சுரேஷ் இரண்டு குச்சி மிட்டாய்களை வழங்கியுள்ளார். இது மட்டும் இன்றி கூல் சுரேஷின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அவரே ஏற்பதாக உறுதி அளித்திருக்கின்றார். இதுதான் இருப்பதிலேயே மிகச் சிறந்த பரிசு வேறு என்ன எனக்கு வேண்டும் ஐசரி கணேஷ் எனக்கு கடவுளாக தெரிகின்றார் எனக் கூறி கண்கலங்கியுள்ளார்.