fbpx

Isha | மூடப்படுகிறதா ஈஷா யோகா மையம்..? சிக்கலில் மாட்டிவிட்ட தமிழ்நாடு அரசு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு எந்வொரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நிறுத்தவும், சீல் வைக்கவும் கடந்த 2012ஆம் ஆண்டில் அரசு பிறப்பித்த உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி ஈஷா தரப்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி வழங்கியது, வழிபாட்டு தளத்திற்கான சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வாத பிரதிவாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், உரிய அனுமதி பெற்றிருக்காவிடில் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

BB Tamil 7 | இவங்க 2 பேரும் வெளியவே பேய் ஆட்டம் ஆடுனாங்க... இதுல பிக்பாஸ் வீட்டுக்குள்ள வேறயா..? தரமான சம்பவம் இருக்கு..!!

Thu Aug 24 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் ஒரு வீட்டிற்குள் சுமார் 18 போட்டியாளர்களை அடைத்து வைத்திருப்பார்கள். ஆனால், இம்முறை ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்தும் விதமாக 2 பிக்பாஸ் வீடுகள் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியும் […]

You May Like