ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் மிகப்பெரிய கள்ளநோட்டு விநியோகஸ்தரான லால்முகமது நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் ஐ.எஸ்.ஐ. இயக்கத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வந்த கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்து வந்த லால்முகமது (55) நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்ஐ இயக்கத்தில் பெரிய கைகூலியான லால் , இந்தியாவில் கள்ள நோட்டுக்களை மாற்றி வந்த பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். பாகிஸ்தான் , பங்களாதேஷ் உள்பட்ட நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளார். அதிகாரிகள் சிலர் தாவூத் இப்ராஹிமின் டி பிரிவு குழு எனவும் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் ஏஜென்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளான்.
காத்மாண்டு பகுதியில் காகேஸ்வரி மனோகரா நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் இறங்கி சென்றுள்ளான். அப்போது அங்கு பைக்கில் நின்று கொண்டிருந்த இருவர் அவனை துப்பாக்கியை எடுத்து சுட்டன். லால்முகமது தப்பிக்க முயற்சி மேற்கொண்டபோது தொடர்ந்து அவர்கள் சுட்டுக்கொண்டே இருந்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தலங்களின் லால்முகமது சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவன் யார் என தெரிந்ததை அடுத்து தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.