சினிமா மீது கொண்ட காதலால் 2011-ம் ஆண்டு உத்தரபிரதேச பேட்சில் இருக்கும் அபிஷேக் சிங் என்பவர், தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த அபிஷேக் சிங் நடிப்பிலும் மாடலிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே சில படங்களில் பணியாற்றியவர். 2011-ம் ஆண்டு உத்தரபிரதேச பேட்சில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அவரது மனைவி துர்கா சக்தி நாக்பால் பண்டா மாவட்டத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஆவார். சர்வீஸில் இருக்கும் போது அபிஷேக் சிங் பல சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் பார்வையாளராக மத்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.
அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் மற்றும் அசர்வா சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக சென்ற அபிஷேக், நவம்பர் 18ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் உத்தியோகபூர்வ வாகனம் அருகில் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் அவரை தேர்தல் பணிகளில் இருந்து நீக்கியது. பணியை புறக்கணித்ததால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அபிஷேக் சஸ்பெண்ட் ஐஏஎஸ் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துள்ளார்.