ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,585 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.500 குறைந்து, ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 45,000 ரூபாயை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.