fbpx

இஸ்ரேல்: ஏவுகணை தாக்குதலில் சிக்கிய கேரள பெண்..! 4 முறை அறுவை சிகிச்சை..! தீவிர மருத்துவர் கண்காணிப்பு..,

இஸ்ரேலில் நடந்து வரும் ஹமாஸ் குழு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இதை இஸ்ரேல், தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் தான் தற்போது போர் தொடங்கியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை கொண்டு ஹமாஸ் குழு தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலை பயனப்டுத்தி ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். மேலும், கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்வது பதைபதைக்க வைத்து வருகிறது. இதற்கு பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி உள்ளது.

தெற்கு இஸ்ரேல் மீது அண்மையில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,100ஐ தாண்டியுள்ளது, மூன்றாவது நாளாக இந்த தாக்குதல் போர் நடந்து வருகிறது. போர் நீடிப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. போர் நடந்து வரும் இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில், 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் ஆஸ்கெலோன் என்ற பகுதியில் செவிலியராக வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்தா ஷீஜா ஆனந்த் என்ற பெண் சனிக்கிழமை நடந்த ஏவுகணை தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலால் படுகாயமடைந்த அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்று, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 47 வயதான இந்தியாவை சேர்ந்த ஷீஜா ஆனந்துக்கு நான்கு முறை அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் தாக்குதலில் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து தகவல்களை இஸ்ரேலில் உள்ள இந்தியா தூதரகம் சேகரித்து வருகிறது. மேலும் காயமடைந்த ஷீஜா ஆனந்த் குறித்து கவலைப்பட வேண்டாம் என உறவினர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Kathir

Next Post

டிவியை ஆஃப் செய்த சிறுவன்; ஆத்திரத்தில் தாய் மாமன் செய்த கொடூர செயல்..

Mon Oct 9 , 2023
12 வயதான சிறுவன் ஒருவன், சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளான். மேலும், அவர்களுடன் சிறுவனின் தாய் மாமன் மற்றும் தாத்தா வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று சிறவன் லேப்டோபில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதனை பார்த்த சிறுவனின் தாய் மாமாவான மனோஜ் குமார், கோவத்தில் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் சிறுவன் கோவமாக இருந்துள்ளான். இந்நிலையில், […]

You May Like