பாலஸ்தீனின் காசா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், அந்த நகரமே தரை மட்டமாகியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 2000-ஐ நெருங்கியுள்ளது.
ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு, பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்த நாடு இஸ்ரேல். தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை பாலஸ்தீன் பூர்வ குடிகள் விரும்பவில்லை. இதனால், பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றிக்கொண்டே வந்தது.
இஸ்ரேல் தனது நிலப்பரப்பை பெரிதாக்கி, பாலஸ்தீன் நிலப்பரப்பு வரைபடத்திலேயே காணாமல்போகும் அளவுக்கு செய்தது. காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமே தற்போது பாலஸ்தீன் வசம் உள்ளன. ஆனால், அதையும் கைப்பற்ற இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றுவதற்காக லட்சக்கணக்கான மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்கு தொழுகைக்கு செல்ல விடாமல் தடுப்பது, தொழுக செல்பவர்களை மசூதிக்கு உள்ளே சென்று அவர்களை தாக்குவது, சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது என இஸ்ரேல் பல்வேறு மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அல் அக்சா மசூதிக்கு ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததாகவும், அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இதனை காரணம் காட்டி காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள், விமான நிலையங்களை நோக்கி 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் காசா பகுதியிலிருந்து பாய்ந்தன. ஆபரேசன் அல் அக்சா பிலட் என்ற பெயரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுடன், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவ வீரர்களை ஹமாஸ் அமைப்பு கைது செய்தது. ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன் மீது போரை அறிவித்தது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.
பாலஸ்தீனுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல், விமானம் மூலம் குண்டு வீச்சு, உலகளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டு வீசி தாக்கி வருகிறது. தொடர் தாக்குதல் காரணமாக காசா நகரின் அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மொத்த பலி எண்ணிக்கை 2000-ஐ நெருங்கி உள்ளது.