fbpx

அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்! – காசாவை அடுத்து ரஃபா மீது குறி..

காசாவை அடுத்து ரஃபா மீதான மிகப்பெரும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸ் ஆயுதப்படையினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் காசா பகுதியில் அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போரினால்,  30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடுத்த கட்டமாக ரஃபா நகரை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. ரஃபா என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலத்தீனிய நகரம். ரஃபா ஆளுநரகத்தின் தலைநகராக விளங்கும் இந்த நகரம், காசா நகருக்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக காசா மீதான தனது இறுதித்தாக்குதலை அதிகரித்து வந்த இஸ்ரேல், அடுத்தபடியாக ரஃபா நோக்கி திரும்புகிறது. இதற்காக கான் யூனிஸ் அருகே புதிய கூடாரங்களை இஸ்ரேல் அமைத்துவருவதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் அவற்றை இஸ்ரேல் மறுத்துள்ளது.

ரஃபா மீதான இஸ்ரேலின் அடுத்தக்கட்ட தாக்குதல், அப்பாவி மக்கள் மீதான காசா கொடூரத்தை மீண்டும் அங்கே அரங்கேற்றும் அச்சுறுத்தலை தந்துள்ளது. இஸ்ரேல் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் இயல்பு வாழ்க்கையை தொலைத்திருக்கும் பாலஸ்தீன மக்கள், சுகாதார மற்றும் உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். போருக்கு இணையாக உணவு இன்மையால் அங்கே பலியாகும் உயிர்களும் அதிகரித்துள்ள. இந்த சூழலில் ரஃபா நகரை குறிவைத்து இஸ்ரேல் நகர்வது, சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

’ஒருவர் இறந்தால் 45% சொத்து பிள்ளைகளுக்கு’..!! ’55% அரசாங்கத்திற்கு’..!! இந்தியாவில் புதிய சட்டம்..?

Wed Apr 24 , 2024
இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், ஒரு நபரின் சொத்துக்களில் 55% பங்கை அமெரிக்க அரசாங்கம் கோருவதற்கு உரிமையுடைய ஒரு பரம்பரை வரி உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ”அமெரிக்காவில், பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால், […]

You May Like