Israel-Lebanon: லெபனான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் தற்போது தெற்கு லெபனானில் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டை இஸ்ரேல் ராணுவம் இப்போது குறிவைக்கப் போவதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் திங்களன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு லெபனானில் இருந்து குறைந்தது 10 ஆயிரம் பேர் வெளியேறி வருவதாக லெபனான் அமைச்சர் நாசர் யாசின் தெரிவித்தார். மறுபுறம், இஸ்ரேலில் ஒரு வார அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலிய ஏவுகணைகள் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 300 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்தன. இந்தத் தாக்குதல்களில் 274 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ெலபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியை தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் நடத்துவதற்கு கூடுதல் துருப்புகள் வழங்குவதற்கு இஸ்ரேல் ராணுவதளபதி ஹெர்ஸி ஹலேவி ஒப்புதல் அளித்துள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்பொல்லாவுக்கு எதிராக ஒரு பெரிய இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. லெபனான் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முறையீட்டை லெபனான் மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேலின் போராட்டம் உங்களுக்கு எதிரானது அல்ல, ஹிஸ்புல்லாவுக்கு எதிரானது என்று லெபனான் மக்களிடம் நெதன்யாகு கூறினார்.
Readmore: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச்கூடும்..!