fbpx

இஸ்ரேல் போர்..!! இந்திய மக்களுக்கு திடீரென வந்த எச்சரிக்கை செய்தி..!! உங்களுக்கும் வந்துருக்கா..?

மொபைல் போன் வாங்கவே காசு இல்லை என்ற நிலைமை எல்லாம் மாறிவிட்டது. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமுமே மொபைல் போன் உள்ளது. குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் அவற்றை எளிதாக வாங்கி விடுகின்றனர்.

அதேபோல, ஈஎம்ஐ போன்ற வசதியின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கமுடிவதால், ஒரு சராசரியான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் செயலிகள், கேம்கள் என நம்மை ஸ்மார்ட்போனிலேயே கட்டிப் போட்டு வைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பல ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ‘அவசரகால எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் ஃபிளாஷ் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டின் அவசரகால எச்சரிக்கை அமைப்பை சோதிக்கும் வகையில் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் பிராட்காஸ்டிங் அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி எச்சரிக்கை செய்தி ஆகும். இஸ்ரேலில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை மெசேஜ் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

ஆதி கைலாஷ் மலைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர்..!! சிவன் பார்வதி கோயிலில் வழிபாடு..!!

Thu Oct 12 , 2023
உத்தரகாண்டில் ஆதி கைலாஷ் சிகரத்தின் தரிசனத்துடன், பார்வதி குளத்தில் உள்ள சிவன் பார்வதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள கைலாஷ் வியூ பாயிண்டில் இருந்து இன்று காலை ஆதி கைலாசத்தை பார்வையிட்டார். பின்னர், பார்வதி கோவிலில் வழிபாடு செய்தார். இங்கிருந்து 20 கிமீ தொலைவில் சீனாவின் எல்லை தொடங்குகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் மலைக்கு […]

You May Like