Israel attack: வடக்கு காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை5 குழந்தைகள் உட்பட 25ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் ஓராண்டாக நீடிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை வௌியேறும்படி உத்தரவிட்டிருந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது அங்கு தொடர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
அதன்ஒரு பகுதியாக வடக்கு காசாவின் நுசிராத் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 18 வயது குழந்தை, 10 வயது சிறுமி உள்பட 21 பேர் பலியாகினர். அதேபோல் நேற்று முன்தினம் டெய்ர் அல் பலாஹ் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடந்த இரண்டுநாள்களில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், வடக்கு லெபனான் மீதான தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Readmore: இல்லற வாழ்க்கை ஓஹோன்னு இருக்கணுமா..? தூங்கும்போது இந்த பொருளை கூடவே வெச்சிருங்க..!!