fbpx

தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்!… முக்கிய இடங்கள் குறிவைப்பு!… காசாவில் அதிகரிக்கும் பதற்றம்!

ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலு இஸ்ரேல் ராணுவமும் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துவருகிறது. இந்த தாக்குதலால் காசா நகர் முழுவதும் உருக்குலைந்து போனது. இருத்தரப்பினரின் போர் அடுத்தடுத்து தீவிரமடைந்ததையடுந்து வருவதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

ஆனால், போரின் கோரத்தாண்டவத்தால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே தண்ணீர், உணவு, அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளின்றி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த போரில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.

தொடர்ந்து 20வது நாளாக இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹமாஸின் முக்கிய இடங்களை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர், ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி தாக்குதலை முடித்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் திரும்பியதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக, தரைவழி தாக்குதலை தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், தாக்குதலில் ஈடுபட தாமதமாகியது. இதற்கு ஒரு காரணம் அமெரிக்கா எனவும், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று தரைவழி தாக்குதலை தாமதமாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், நேற்று தான் முதல் முறையாக தரைவழியாக கசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Kokila

Next Post

இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Fri Oct 27 , 2023
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று, அக்.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரையில் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எவ்வித […]

You May Like