fbpx

வீட்டின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்!… ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலி!

காசாவின் கான் யூனிஸிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் 22,313 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 57,296 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நேற்று முன் தினம் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri), லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளால் கொல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு ஏவுகணையும் 100 கிலோகிராம் எடை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

தற்போது, காசாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் உஷார்படுத்தப்பட்டன. காசாவைச் சேர்ந்த அதிகப்படியான பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் இஸ்ரேலிய சிறையில் உள்ளனர். அவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் அருகே உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

எலான் மஸ்க், பில்கேட்ஸ் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள்!… அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல்!

Fri Jan 5 , 2024
அமெரிக்க வர்த்தக அதிபர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா டுடே, ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழு, அல்-கொய்தா அமைப்பினருடன் இணைந்து வெளியிடப்பட்ட செய்திகளின்படி, காசா பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான போருக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எங்களது இலக்கில் […]

You May Like