fbpx

விக்ரம் லேண்டரை பறக்கவிட்டு மீண்டும் தரையிறக்கிய இஸ்ரோ..!! இனி நிலவுக்கு மனிதர்களையும் அனுப்பலாம்..!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது, சந்திரயான் 3இன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தனது பணியை முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து வருகிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற அனைத்து கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைக்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.

அதாவது விக்ரம் லேண்டர் இருந்த இடத்தில் இருந்து பறந்து மேலே சென்று அதன்பின் மீண்டும் வேறு இடத்தில் தரையிறங்கி உள்ளது. இஸ்ரோ கட்டளையின் பேரில், அது தனது இயந்திரங்களைச் ஆன் செய்து பறந்துள்ளது. எதிர்பார்த்தபடி விக்ரம் லேண்டர் சுமார் 40 செமீ மேலே பறந்து, 30 – 40 செமீ தொலைவில் நகர்ந்து பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

அப்போது அதில் இருந்த பாகங்கள் எல்லாம் உள்ளே சென்றுவிட்டு அதன்பின் மீண்டும் வெளியே கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவில் மனிதர்களை இறக்கும் வித்தையை இந்தியா செய்ய முடியும். அங்கேயே பறந்து இங்கும் அங்கும் செல்லும் வித்தையை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப பின்னர் மீண்டும் திரஸ்டர்கள் உதவியுடன் பூமிக்கு திரும்ப இது பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

பாஜக நிர்வாகி குடும்பத்துடன் கொலை..!! வெட்கமாக இல்லையா முதல்வரே..!! அண்ணாமலை கடும் கண்டனம்..!!

Mon Sep 4 , 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான 4 பேரில் மோகன் ராஜ் என்பவர் பாஜகவின் மாதப்பூர் ஊராட்சி கிளையின் தலைவராக உள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் […]

You May Like