fbpx

வரும் 21ஆம் தேதி விண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் இஸ்ரோ..!! எதற்காக..? என்ன திட்டம் தெரியுமா..?

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டம் வரும் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சந்திரயான்-3, ஆதித்யா-L1 என்று இஸ்ரோ பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விண்வெளித்துறையில் மிகவும் எதிர்பார்க்க கூடிய ஒரு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரக்கூடிய ’ககன்யான்’ திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், வரும் 21ஆம் தேதி இத்திட்டத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக விண்வெளி வீரர்கள் தயார் செய்யப்பட்டு விட்டனர். விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பல்வேறு கட்டகளை இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், வரும் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை என்பது நடைபெறவுள்ளது. இது மிக முக்கிய திட்டம் என்பதால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னதாக பாதிப்புகள் உள்ளதா? என்பதை சோதனை ஓட்டம் மூலம் கண்டறிய முடியும். இந்த சோதனையில் ரோபோ ஒன்றை அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

மத்திய கிழக்கில் சம்பவம் செய்துள்ள "லியோ" படம்…! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Mon Oct 16 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் […]

You May Like