fbpx

இஸ்ரோ எச்சரிக்கை..! வெப்பநிலை அதிகரிப்பு..! இமயமலை பனிப்பாறைகள் உடைப்பால் வெள்ளம் நிலச்சரிவு ஏற்படும்..!

இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் நீர்ப்பரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 1984ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இஸ்ரோவால் அனுப்பட்ட பூவுநோக்கு செயற்கைகோள் மூலமாக வரைப்பட தரவுகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யபட்டது.

இந்த ஆய்வின் மூலம், இமயமலையில் உள்ள 601 ஏரிகள் 2 மடங்குக்கு மேல் விரிவடைந்திருப்பதும், 10க்கும் மேற்பட்ட ஏரிகள் 1.5 முதல் 2 மடங்கு வரை அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 65 ஏரிகள் 1.5 மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2016, 2017ஆம் ஆண்டின் அடையாளம் காணப்பட்ட 10எக்டருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில் 631 பணிப்பாறை ஏரிகள், 1984 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு மூலமாக விளங்கும் ஏரிகளின் பரப்பும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் உள்ள நதிகளுக்கு இந்த பனிப்பாறைகள் ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தக் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால், பனிப்பாறை ஏறி வெடிப்பு வெள்ளம்(GLOFs) ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பனிப்பாறை ஏறி வெடிப்பு வெள்ளம் என்பது சாதாரண வெள்ளத்தை விட பல மடங்கு அதிக சீற்றத்தோடு வரும் என்பதால் மிகப்பெரிய அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பனிப்பாறை ஏறி வெடிப்பு வெள்ளத்தால் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் அளவுக்கு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Read More: மக்களே அலர்ட்…! இந்த 67 மருந்தை பயன்படுத்த வேண்டாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..‌!

Kathir

Next Post

’மாணவர்களின் சந்தோஷத்தை கெடுக்காதீங்க’..!! ’எந்த பள்ளியிலும் இது நடக்கக் கூடாது’..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Wed Apr 24 , 2024
1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தோ்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. […]

You May Like