பிரபல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பல ஐடி நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்கள் 8 ஆண்டுகளுக்கும் குறைந்த பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது தேவைகள் அதிகமாக இருந்ததால் பகுதிநேர பணியாளர்களை பணிக்கு அமர்த்திய ஐடி நிறுவனங்கள், தற்போது பொருளாதார மந்தம் மற்றும் குறைந்து வரும் வேலைகள் காரணமாக 20% அளவிற்கு பகுதிநேர பணியாளர்களை குறைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.