fbpx

டீ குடிக்க சென்ற ஐடி ஊழியர்..!! தனியாக அழைத்துச் சென்ற திருநங்கைகள்..!! ரூ.20 ஆயிரம் அபேஸ்..!!

ஐடி நிறுவன ஊழியரை, தனியாக அழைத்துச் சென்று ஜி-பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற, திருநங்கைகள் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்திருநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குருசாமி (28). மென் பொறியாளரான இவர், ராமாபுரத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 25ஆம் தேதி இரவு காசி திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு, அதிகாலை 2.30 மணி அளவில் 100 அடி சாலையில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள் உட்பட 3 பேர், குருசாமியிடம் பேச்சு கொடுப்பதுபோல் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு அவரை மிரட்டி அவரின் ஜி-பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொறியாளர் உடனே எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பொறியாளர் டீ குடித்த கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்தபோது, குருசாமியை திருநங்ககைள் உட்பட 3 பேர் தனியாக அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து, 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஜி-பே மூலம் பணத்தை பறித்த செல்போன் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.

Chella

Next Post

தனது மனைவியுடன் ஓட்டம் பிடித்த கள்ளக்காதலனின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்..!! பரபரப்பு சம்பவம்..!!

Tue Feb 28 , 2023
பீகார் மாநிலம் ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009இல் ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், ரூபி தேவிக்கு அப்பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நீரஜ் போலீசில் […]

You May Like