fbpx

படத்திற்கு தடை கேட்பதே ஒரு பேஷனாகி விட்டது..!! வரலாறு தெரியாமல் எப்படி தடை விதிக்க முடியும்..? ஆர்.ஜே.பாலாஜி பட வழக்கில் அதிரடி உத்தரவு..!!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “சொர்க்கவாசல்” திரைப்படத்தை OTTயில் வெளியீடு செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

சிதர்த் விஷ்வநாத் எழுதி, இயக்கிய சொர்க்கவாசல் திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் செல்வராகவன், கருணாஸ், நத்ராஜ் சுப்ரமணியன், சனியா ஐயப்பன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2024 நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஒரு சாதாரண மனிதன், ஊழல் கொண்ட ஒரு அமைப்பினால் துரத்தப்பட்டு சிறைபெறுகிறான்.

அவன் மனதில் ஒரு ஆழ்ந்த உளப்போராட்டத்தை சந்திக்கிறான். சிறைகள் உண்மையில் சிகிச்சை அளிப்பதற்கா? அல்லது மனிதர்களை குற்றத்தின் பள்ளத்தில் மேலும் ஆழமாக நழுவ வைக்கிறதா? என்பதே இப்படத்தின் கதையாகும். இந்நிலையில், இப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, OTTயில் வெளியீடு செய்ய தடை கோரி மனு அளித்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இத்திரைப்படம் வெளியாக தடை கேட்பது இப்போது ஒரு பேஷனாகி விட்டது. படத்தை எடுத்துவிட்டு அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு மனுதாரருக்கு தெரியுமா? வரலாறு தெரிந்தால் தான், எது தவறு எது சரி என முடிவு எடுக்க முடியும். வரலாறு தெரியாத பட்சத்தில் எவ்வாறு படத்திற்கு தடை விதிக்க முடியும்?

ஒரு திரைப்படத்தில் சில கருத்துகள் வந்தாலும், அதை சர்ச்சையாக்குவதால் அதிகமானோர் அதை பார்க்கும் சூழல் ஏற்படும். பொழுதுபோக்கு என அதை விட்டுவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும். நாடு முழுவதும் இப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள் என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது.

Read More : ”மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்தவாதி”..!! நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்..!!

English Summary

The High Court bench dismissed a petition seeking a ban on the release of the film “Sorkkavasal” starring actor RJ Balaji on OTT.

Chella

Next Post

ஆமணக்கு எண்ணெய்யின் அதிசயம்..!! வயிற்றில் ஒரு பூச்சிகள் கூட இருக்காது..!! இவ்வளவு நன்மைகளா..?

Fri Dec 27 , 2024
ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டு துளி போதுமானது. இது பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான எண்ணெய். இதனை […]

You May Like