fbpx

#Tnpsc: போட்டித் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.‌..! வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14-ம் தேதி வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 044 24621475 மற்றும் 044 24621909 ஆகிய எண்களைத்தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் மற்றும் சேர்க்கைக் குறித்த நாள் ஆகியவற்றை மேற்படி இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேற்படி தேர்விற்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கேற்ப www.civilservicecoaching.com இணையவழியாக தெரிவிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் 21-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#JustNow: இளநிலை NEET தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது...! தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பு...!

Wed Sep 7 , 2022
நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது என தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர். முதல்முறையாக இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு […]

You May Like