இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்; இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் 14 வரை ரூ.300 ரூபாய் வரைவு காசோலையுடன் The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6-வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். முதுகலை மாணவர்கள் 4-வது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.