தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள.
பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதற்கான தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. 483 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.