fbpx

இனிதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்.. அடுத்த 3 மணி நேரம் எச்சரிக்கையா இருங்க..!! – வெதர்மன் வார்னிங்

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வானிலை நிலவரம் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் பதிவில், ”மேகங்கள் வலுவிழப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக ஒரே இடத்தில் மேகங்கள் குவிந்து அப்படியே இருக்கிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அதாவது மழைக்கு இடைவெளி இருக்காது என்பதை தான் இது காட்டுகிறது.

மேகங்கள் ஒரே இடத்தில் குவியதால் குறைந்தபட்சமாக அடுத்த 3 மணிநேரத்துக்கு அதிக மழை என்பது இருக்கும். இதனால் அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமாக கிளம்புவது நல்லது. ஏனென்றால் நாளையும் மழை அதிகமாக இருக்கலாம். அதோடு சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது” என கூறியுள்ளார்.

Read more ; அனைத்து விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

It has been raining continuously since yesterday in Chennai. In this case, Tamil Nadu Weatherman has given important information.

Next Post

பலமுறை பலாத்காரம்..!! 4 முறை கருக்கலைப்பு..!! காதல் மனைவியை கழற்றிவிட்டு ஓடிய கணவன்..!!

Tue Oct 15 , 2024
Alleging that he had raped her several times and had four abortions in the three years of their marriage, Satish's family kept him away from her.

You May Like