fbpx

#ComeBackIndian பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுக்கிறாரா கமல்..? – ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிக்ழ்ச்சியை கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. எட்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது. அதையும் கமலே விஜய் டிவிக்கு முன்னாடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த சீசனில் அவர் எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது.

கமலிடத்தை யார் நிரப்ப போகிறார் என்ற கேள்வி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வைரலானது. அந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து பொருந்தினார் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜய் சேதுபதியின் நெறிமுறை மீதும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என விமர்சனங்கள் கலந்து படி தான் இருக்கின்றன. எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாகவும் இயல்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் பாணி பலரைக் கவர்ந்துள்ளது.

ஆனாலும் கமல் ஹாசனின் பாணியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், போட்டியாளர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்த வைப்பதில் கமல் ஹாசன் கைதேர்ந்தவர் என்பதே ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவை தங்கவேலு இன்று பரபரப்பான தகவல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் கமலஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் கோர்ஸ் ஒன்றை படிக்கப் போகிறதால்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்தார் என்ற அறிவிப்பை சொல்லியிருக்கிறார். கமல் இந்த சீசனிலேயே உள்ளே வருவாரா அல்லது அடுத்த சீசனில் இருந்து தொகுத்து வழங்குவாரா என்பது இனி தான் தெரியும் என கூறியுள்ளார். அவரின் பேச்சு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தியன் 2 பட பாணியை போல #comebackkamalsir என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Read more ; பெற்றோர்களே எச்சரிக்கை.. பூரி தொண்டையில் சிக்கி 6 ஆம் வகுப்பு சிறுவன் பலி..!

English Summary

It has been reported that Kamal Haasan is going to host the Bigg Boss show again.

Next Post

திருமணம் தாண்டிய உறவு.. பழகுவதை நிறுத்தியதால் இளம் பெண் கொடூர கொலை..!!

Tue Nov 26 , 2024
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சந்திரலிங்கம். இவருடைய மனைவி தேவிகலா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு லிங்கராஜா தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. தகாத உறவு குறித்து தேவிகலாவை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் லிங்கராஜா உடன் பேசுவதை தேவிகலா நிறுத்திக் கொண்டார். நேற்று காலை 9.30 மணியளவில் தேவிகலா தனது […]

You May Like