fbpx

Dr Ramadoss Biopic | திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு..!! இயக்குநர் இவர்தான்..

கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரது வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுப்பது தான் ட்ரெண்டாகி வருகிறது. இந்திரா காந்தி படம் முதல் இளையராஜா வாழ்க்கை வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

அந்த வகையில், டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாகவும் இப்படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை படத்தில் அவரது இளமைக்காலம், மருத்துவராக பணியாற்றிய நிகழ்வுகள், அவர் அரசியல் கட்சியை நிறுவவி வன்னிய சமுதாய மக்களுக்கு உதவியது…வேலைவாய்ப்பு மற்றும் தனி ஒதுக்கீடு பெற போராட்டங்கள் நடத்தியது இதில் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து இயக்குநர் சேரன் கூறுகையில், தயாரிப்பு நிறுவனம் முறைபடி அறிவிப்பு வெளியிடும் வரை தம்மால் எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் சேரன். சேரன் துணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். 1997ல் வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சேரன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் எண்ணற்ற பங்கினையாற்றி வரும் சேரன் தற்போது வெப் சீரிஸிலும் களம் கண்டிருக்கிறார்.

Read more ; ரிலையன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு CCI ஒப்புதல்..!!

English Summary

It has been reported that the film is a biography of Dr. Ramadoss and will be directed by Cheran.

Next Post

செயற்கைக்கோள் மூலம் இனி இரவிலும் சூரிய ஒளி..!! - கலிபோர்னியா ஸ்டார்ட்அப் ஆராய்ச்சியில் வெற்றி

Wed Aug 28 , 2024
Satellites to beam sunlight down to earth at night, says California startup

You May Like