fbpx

புது அறிவிப்பு…! 2023 ஜனவரி முதல்… இதற்கு தடை…! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!

2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழு தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்து, 1950-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(A) பிரிவின்படி அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண்கோயல் ஆகியோரைக் கொண்ட தேர்தல் ஆணையம் அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, 2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழு தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மறுவரையறை நடைமுறை முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

அரசியல் சாசனத்தில் 170-வது பிரிவின் கீழ் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டியது அவசியமாகும். ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல் சாசனப்பிரிவு 330 மற்றும் 332-ன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

Vignesh

Next Post

ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்திக் கொலை..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண்..!! பேச மறுத்ததால் வெறிச்செயல்..!!

Wed Dec 28 , 2022
தன்னிடம் பேச மறுத்த 20 வயது இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் 51 முறை ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோப்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தினமும் அந்த பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண்ணிடம் நைசாக பழக ஆரம்பித்தார். […]
ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்திக் கொலை..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண்..!! பேச மறுத்ததால் வெறிச்செயல்..!!

You May Like