fbpx

’பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம்’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின்

”மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலையும் மேம்படுத்த” என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், கண்களில் கனவுகளுடனும் காத்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம் ஆகும். பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த. தேசிய தரவரிசை பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதை மத்திய அரசின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

’பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம்’..! முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தமிழர்கள் எப்போதும் தொழில்துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். இடைநிற்றல் இன்றி, அனைவருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தடையற்ற கல்வி வழங்குவதே எங்களது இலக்கு. படித்து பட்டம் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு பெறும் சூழலை உருவாக்கி வருகிறோம். செமிகண்டக்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், லித்தியம் பேட்டரி உள்ளிட்ட எதிர்கால உற்பத்தி துறையில் தமிழக அரசு கவனம் செலுத்தி முதலீடு செய்துள்ளது. தமிழகம் 4ஆம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும். மாணவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக எது இருந்தாலும் அதனை தகர்த்து முன்னேறுங்கள். பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, புதுமை கருத்துகளை மாணவர்கள் ஏற்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

தரையில் உருண்டு.. புரண்டு.. கதறி அழுத மாணவிகள்.. அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..

Fri Jul 29 , 2022
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ரைகோலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள், கதறி அழுது, தரையில் உருண்டு கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் குழுவினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியை விம்லா தேவி, பேசிய போது “ கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்களின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏற்பட்டது.. நேற்று […]

You May Like