fbpx

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இது கட்டாயம்..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மத்தியப்பிரதேச அரசு மாணவர்களுடைய விளையாட்டு கலாச்சாரம் மற்றும் உடல் தகுதியை வளர்க்கும் விதமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய விளையாட்டு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறையானது இளம் மாணவர்களுடைய ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விளையாட்டை ஒருங்கிணைப்பதன் மூலமாக சிறிய வயதில் இருந்தே மாணவர்களுடைய ஒழுக்கம், விடாமுயற்சி, குழு பணி போன்றவற்ற விதைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2 சதவீதம் வளர்ச்சி...!

Tue May 16 , 2023
விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 7.92 சதவீதம் குறைவு ஆகும். 2022 ஏப்ரல் […]

You May Like