முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது ஆபத்து” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எத்தனையோ இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யாமல் ராஜீவ் காந்தி கொலையில் கைதானவர்களை விடுதலை செய்திருப்பது தவறு என தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், அனைத்திற்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மதசார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் திமுகவுடன் இணைந்துள்ளோம்” என்றார்.