மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள 1,124 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 1,124
ஓட்டுநர் – 845
பம்ப் ஆப்பரேட்டர் – 279
கல்வித் தகுதி :
* 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நான்கு சக்கர வாகனத்துக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிப்போரின் 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்
தேர்ச்சி முறை :
* எழுத்துத்தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
* மருத்துவ சோதனை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் :
ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.3.2025
Read More : Free Fire விளையாட்டிற்கு அடிமை..!! வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுவன்..!! பெற்றோர்களே உஷார்..!!