fbpx

’இந்த காரணத்திற்காக தான் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு’.! பரபரப்பை கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்.!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சி, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை மறைக்கவே திமுக இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

’இந்த காரணத்திற்காக தான் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு’..! பரபரப்பை கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்.!

எத்தனை சோதனைகள் நடத்தினாலும் அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம். முன்னாள் அமைச்சர்கள் சோதனைகளுக்காக மனம் தளராமல் கட்சி பணியாற்றுவர்கள். கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி வருகிறது. அதிமுகவின் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னனியில் திமுகவின் திட்டம் கானல் நீராக போகும். பகல் கனவு பலிக்காது. சோதனை என்கிற பெயரில் காவல்துறை தவறாக வழி நடத்தப்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தனது ஆசை நிறைவேறியதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை ஷேவ் செய்த நபர்.. அப்படி என்ன ஆசை..?

Tue Sep 13 , 2022
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது ஆசை நிறைவேறியதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு தாடியை ஷேவ் செய்துள்ளார்.. சத்தீஸ்கரில் உள்ள மானேந்திரகரில் ராமசங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.. ஆர்டிஐ ஆர்வலரான இவர் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் (எம்சிபி) மாவட்டத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மாவட்டமாக மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் அறிவிக்கப்பட்ட […]

You May Like