fbpx

’இந்த காரணத்திற்காக தான் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!!

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி ஒரு பக்கம் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்தாலும், அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளையும் மற்றொரு பக்கம் முன்னெடுத்துள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், ”நீட் தேர்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளிக்கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனரகம் மேற்கொள்ளும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியாக வினாத்தாள் தயாரித்து, தினசரி தேர்வுகள் நடத்தப்படும்.

ஆன்லைன் வழியிலும் பாடங்கள் நடத்தப்படும். அரையாண்டு, பொதுத்தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 4 ஆசிரியர்கள் வீதம், மாநில அளவில், 20 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். அனைத்து வேலை நாட்களிலும், மாலை 4 முதல் 5.30 மணி வரை பள்ளிகளிலேயே பாடவாரியாக வகுப்புகள் நடக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்போது நீட் தேர்வு பயிற்சியை அரசுப் பள்ளிகளில் வழங்குவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்தார். அரசுப் பள்ளி மாணவர்களால் வெளியே தனியாரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவு செய்ய முடியாது என்பதாலும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் நடப்பினும் கூட அதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகும் வகையிலும் தான் இப்பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Chella

Next Post

’ஸ்டாலினுக்கு பயம்’..!! ’தைரியம் இருந்தா இதை சொல்லுங்க’..!! வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி..!!

Fri Nov 3 , 2023
அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”இன்னைக்கு பயம் வந்துருச்சு ஸ்டாலினுக்கு. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது. திமுக கூட்டணி வெற்றி பெறாது. ஸ்டாலின் சொல்றாரு.. நீங்க யாரை பிரைம் மினிஸ்டரா சொல்லுவீங்க ? நீங்க யாரை பிரதமரா சொல்லுவீங்கன்னு சொல்றாரு… சரி நாங்க யாரை பிரைம் மினிஸ்டர்ன்னு சொல்றது இருக்கட்டும். இந்தியா கூட்டணியில் நீங்க அங்கம் வகிக்கிறீங்க. […]

You May Like