fbpx

தமிழக கோவில்களில் இனி “கலாச்சார உடையில் தான் பக்தர்கள் வரவேண்டும்” செல்போன் பயன்படுத்த தடை!!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மேலும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதே போல் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும்என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், கோவில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Kathir

Next Post

அசத்தல்...! 7-ம் தேதி ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ள சிறப்பு முகாம்‌...! முழு விவரம் இதோ...

Sat Dec 3 , 2022
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள்‌ தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ள சிறப்பு முகாம்‌ 07.12.2022 அன்று முதல்‌ தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; UIDIA இந்திய தனித்துவ அடையாளம்‌ ஆமயைம்‌ சார்பாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும்‌ பயன்படுகிறது. இந்நிலையில்‌ மத்திய மின்னணு தகவல்‌ தொழில்‌ நுட்ப அமைச்சகம்‌ […]

You May Like