தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அனைவரும் , ’’ புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் ’’ பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் அதை யாரும் நடைமுறையில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அரசிடம் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்..

வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக செல்பவர்கள் பல்வேறு சந்தர்ப்ப சூழலால் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் என்றால் அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மாநில அரசுக்கு பெரிய சவாலாக இருக்கின்றது. வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் கண்டிப்பாக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும் , பலர் இதை கண்டுகொள்வதில்லை. எனவே தொடர்ந்து அவர்களை மீட்பதில் சிக்கல் உள்ளது என கூறப்படுகின்றது.
- எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் ? குடிபெயர்ந்தவர்கள் சட்டம் 1983ன் படி வெளிநாடு செல்பவர்கள் கண்டிப்பாக அரசிடம் தங்களின் முழுமையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
- மத்திய வெளியுறவுதுறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள POE s அலுவலகங்களில் தங்களின் தகவல்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த அலுவலகம் தலைநகர் சென்னையில் இயங்கி வருகின்றது.
- அங்கீகரிக்கப்பட்ட POE மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்துச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சென்றால் மட்டுமே அவர்களே ஒவ்வொருவருக்கும் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள்.
- வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்துச் செல்லும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும் மத்திய அரசிற்கு 50 லட்சம் வரை தொகையை டெபாசிட் செய்துள்ளது. தங்களின் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட நபர்களுக்கு சந்தர்ப்ப சூழலால் பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் , இந்த டெபாசிட் தொகை மூலம் அவர்களை மீட்டெடுக்கும் பணியினை அரசு மேற்கொள்கின்றது.
- OMCL போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
- எதை செய்யக்கூடாது? – சுற்றுலா விசா மூலம் கண்டிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று அஙகு பணி செய்ய கூடாது.
- ஃபேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்கள் , செய்தி தாள் விளம்பரங்களை நம்பி பதிவு செய்யாத நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
- அரசின் அதிகாரப்பூர்வ அலுவலகங்கள் நிறுவனங்களின் பதிவு செய்யாமல் சென்றால் ஒருவரின் பணியிடம் நிறுவனங்களை தொடர்பு கொள்வது சிரமம் என்பதால் அதனை தவிர்க்க கூடாது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அனைவரும் புலம் பெயர் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளத. வெளிநாடுகளுக்கு செல்வோரின் முழுமையான தரவுகளை சேமித்து வைத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் விரைவில் நல வாரியம் பயன்பாட்டிற்கு வர உள்ளது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.